Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ரஷ்ய எண்ணெய்க்கு தடை; ஸ்லோவாக்கியா எதிர்ப்பு

ரஷ்ய எண்ணெய்க்கு தடை; ஸ்லோவாக்கியா எதிர்ப்பு

ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் மின்சார விலையைக் குறைக்க ஐரோப்பிய ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் ஃபிகோ குற்றம்சாட்டினார்.

பகிரவும் WhatsApp Facebook

ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு ஐரோப்பிய ஒன்றியம் நிரந்தரத் தடை விதித்தால், அதை எதிர்த்து நீதிமன்றத்தை நாட வாய்ப்புள்ளதாக ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ தெரிவித்துள்ளார்.

ரஷ்ய எரிவாயு இறக்குமதியை நிறுத்தும் ஐரோப்பிய ஆணையத்தின் முடிவை எதிர்த்து, ஸ்லோவாக்கியா கடந்த மாதம் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்தத் தடையால், ஸ்லோவாக்கியாவுக்கு ரஷ்யாவிலிருந்து வரும் எரிவாயு விநியோகம் 2027-ல் நிறுத்தப்படும் என்று ஃபிகோ கூறினார்.

தமது கட்சியின் ஃபேஸ்புக் பக்கத்தில் பேசிய அவர், ‘‘எண்ணெய் இறக்குமதியையும் ஒரு கட்டத்தில் நிரந்தரமாக நிறுத்த முடிவு செய்தால், அந்த முடிவையும் உரிய நீதிமன்றத்தில் எதிர்க்க வாய்ப்புள்ளது’’ என்றார்.

ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் மின்சார விலையைக் குறைக்க ஐரோப்பிய ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் ஃபிகோ குற்றம்சாட்டினார். எண்ணெய் பற்றாக்குறையும் வாகன எரிபொருள் விலை உயர்வும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குக் கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஸ்லோவாக்கியாவின் அரசு எரிவாயு நிறுவனமான எஸ்பிபி, ரஷ்யாவின் காஸ்ப்ரோம் நிறுவனத்துடன் எரிவாயு கொள்முதல் ஒப்பந்தம் செய்துள்ளது. அந்த ஒப்பந்தம் 2034 வரை அமலில் உள்ளது. அதன்படி எரிவாயு விநியோகம் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்யவே, இறக்குமதித் தடையை எதிர்த்து ஸ்லோவாக்கியா வழக்குத் தொடர்ந்துள்ளது.

இதற்கிடையே, ஸ்லோவாக்கியாவுக்கு ரஷ்யாவிலிருந்து வரும் கச்சா எண்ணெய் இறக்குமதி 2027 இறுதிக்குள் முழுமையாக நிறுத்தப்பட உள்ளது. ரஷ்ய மூலப்பொருள்களைச் சார்ந்திருப்பதை ஸ்லோவாக்கியா படிப்படியாகக் குறைத்து வருவதாக அந்நாட்டுப் பொருளாதார அமைச்சர் டெனிசா சாகோவா தெரிவித்தார்.

முந்தைய செய்தி
IEA warns of winter gas supply crunch
அடுத்த செய்தி
Renewable energy capacity to reach 530 GW by 2030

தொடர்புடைய செய்திகள்